தமிழகத்தில் 7,837 பள்ளிகளில் முறையான கழிவறை வசதி கிடையாது என தொண்டு நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன. உலக கழிவறை தினம் இன்று கொண்டாடப்படுகிறது. வரும் 2019க்குள் தமிழகத்தில் அனைத்து வீடுகளிலும் கழிவறை என்ற திட்டத்தை முன்னிறுத்தி செயல்பட உள்ளதாக கிராமாலயா, ஆர்.எஸ்.டி.சி., மற்றும் டாய்லெட் எய்ட் தொண்டு நிறுவன நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து கிராமாலயா தொண்டு நிறுவன தலைவர் தாமோதரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நாடு முழுவதும் கழிவறைகள் இல்லாத வீடுகளே இருக்க கூடாது என்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ‘சச் பார் அபியா’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். அதன்படி இந்தியா முழுவதும் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 10 மில்லியன் கழிவறைகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை கிராமங்களில் பெரும்பாலானோர் இன்னும் திறந்தவெளி கழிவறைகளையே உபயோகித்து வருகின்றனர்.
எனவே, அடுத்த 5 ஆண்டுகளுக்குள் மாநிலம் முழுவதும் 42 லட்சம் கழிவறைகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 37 ஆயிரத்து 2 பள்ளிகள் உள்ளன. இவற்றில் 7,837 பள்ளிகளில் முறையான கழிவறை வசதிகள் கிடையாது. சில இடங்களில் ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக இருக்காது. இது போன்ற குறைகள் ஏராளமாக உள்ளன. இவற்றையெல்லாம் இனி வரும் காலங்களில் சரி படுத்துவதை முன்னிறுத்தியே செல்ல உள்ளோம். இந்த திட்டத்தில் அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், அமைப்பு ரீதியான தலைவர்கள் உள்பட பலரை இணைத்து அனைவருக்கும் கழிவறை என கொண்டு வர உள்ளோம் என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை