Ad Code

Responsive Advertisement

குரூப் 4 தேர்வு: 10 லட்சம் பேர் விண்ணப்பம்

தட்டச்சர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட குரூப் 4 பிரிவில் காலியாகவுள்ள 4 ஆயிரத்து 963 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்க புதன்கிழமையுடன் காலக்கெடு முடிந்தது. இந்தத் தேர்வை எழுத 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தத் தேர்வுக்கான அறிவிக்கை, கடந்த மாதம் 14-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
தேர்வுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க நவம்பர் 12-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, புதன்கிழமையுடன் காலக்கெடு முடிந்தது. தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வரும் வெள்ளிக்கிழமை கடைசி நாள். தேர்வுக் கட்டணத்தை அஞ்சல் நிலையங்கள் அல்லது வங்கிகள் மூலமாகச் செலுத்தலாம். எழுத்துத் தேர்வு டிசம்பர் 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது.



விண்ணப்பிக்க ஆர்வம்: குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இளைஞர்களிடையே ஆர்வம் அதிகளவில் காணப்பட்டது. சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும், இறுதியான விவரங்கள் வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை தெரிய வரும் என அதிகாரிகள் கூறினர்.

தேர்வுக்கு விண்ணப்பிக்க புதன்கிழமை கடைசி நாள் என்பதால், அனைவரும் ஒரே நேரத்தில் தேர்வாணைய இணையதளத்தைப் பயன்படுத்தினர். இதனால், இணையதளம் அவ்வப்போது முடங்கியதாக தேர்வுக்கு விண்ணப்பிக்க காத்திருந்தவர்கள் புகார் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement