Ad Code

Responsive Advertisement

தேசிய அறிவியல் தின போட்டியில் வெற்றி: சிங்கப்பூர் செல்லும் 3 மாநகராட்சி மாணவர்கள்!

சென்னை மாநகராட்சி கல்வித்துறை மற்றும் க்வெட் அறிவியல் நிறுவனம் இணைந்து நடத்திய தேசிய அறிவியல் தின வினாடி வினா போட்டியில் சென்னை மாநகராட்சி பள்ளிகளைச் சேர்ந்த 20 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர். பல்வேறு சுற்றுகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த அணிகள் தேர்வு செய்யப்பட்டன.
சென்னை அரும்பாக்கம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் கே.சின்னையா, எஸ்.ஜீவானந்தம், ஜி.லலிதா ஆகியோர் கொண்ட அணி முதலிடத்தையும், ஏரிக்கரை நடுநிலைப் பள்ளி மாணவர்கள் எல்.ஜானகி, ஆர்.ரோஜா, எஸ்.கார்த்திகேயன் ஆகியோர் கொண்ட அணி 2-ம் இடத்தையும், வடபழனி நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் எ.ரமணா, எஸ்.மோகன்ராஜ், எஸ்.சங்கீதா ஆகியோர் கொண்ட அணி 3-ம் இடத்தையும் பிடித்தன.

முதல் 3 இடங்களைப் பிடித்த இந்த அணிகள் முறையே சிங்கப்பூர், கொல்கத்தா, பெங்களூர் ஆகிய ஊர்களில் உள்ள அறிவியல் மையங்களை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு வெளிநாடு செல்வதற்கான பாஸ்போர்ட், பரிசுகளையும், மற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும் மேயர் சைதை துரைசாமி வழங்கினார். இந்நிகழ்ச்சியின்போது சென்னை மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர், கல்வி நிலைக் குழுத் தலைவர் த.மகிழன்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement