Ad Code

Responsive Advertisement

முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு2 லட்சம் விண்ணப்பம் தயார்!

அரசு மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள, 1,807 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, வரும், ஜன., 10ம் தேதி போட்டித் தேர்வு நடக்கும்' என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. இதற்காக, இரண்டு லட்சம் விண்ணப்பங்கள், தயார் நிலையில் உள்ளன.டி.ஆர்.பி., அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்:

10.11.14 முதல், 26.11.14 வரை, 32 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில், விண்ணப்பம் வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம், 50 ரூபாய்; தேர்வுக் கட்டணம், 500 ரூபாய்.

பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, வாங்கிய இடத்திலேயே சமர்ப்பிக்க வேண்டும்; வேறு எந்த வகையில் அனுப்பினாலும், நிராகரிக்கப்படும்.

வரும், ஜனவரி, 10ம் தேதி காலை 10:00 மணி முதல், பகல் 1:00 மணி வரை தேர்வு நடக்கிறது.

தேர்வுக்கு, 150 மதிப்பெண், வேலைவாய்ப்பு பதிவு மூப்பிற்கு, அதிகபட்சமாக, 4 மதிப்பெண்; பணி அனுபவத்திற்கு, அதிகபட்சமாக, 3 மதிப்பெண் என, மொத்தம், 157 மதிப்பெண்ணுக்கு, இட ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண் அடிப்படை யில், தகுதியானவர், தேர்வு செய்யப்படுவர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement