Ad Code

Responsive Advertisement

2 நிமிடத்தில் பாஸ்போர்ட் திட்டம் விரைவில் அமல்: மத்திய அரசுதீவிரம்.

திருச்சி: பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்து காத்திருக்கும் மாணவர்களுக்காக (16வயதுக்கு மேல்) சிறப்பு பாஸ்போர்ட் மேளா திருச்சி சாஸ்திரி ரோட்டில் உள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திரா அலுவலகத்தில் நேற்று நடந்தது. 

திருச்சி, கரூர், அரியலூர், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, பெரம்பலூர், நாகப்பட்டினம் ஆகிய 8மாவட்டத்தை சேர்ந்த 16 வயது பூர்த்தியான 10ம் வகுப்பு மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர், திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலர் பாலமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:

கல்வி நிலையங்கள் ஒத்துழைத்தால் இதுபோன்று மாதம் 2 முறை பாஸ்போர்ட் மேளா நடத்த தயாராக உள்ளோம். சிங்கப்பூரில்2 நிமிடத்தில் பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. ஏடிஎம் எந்திரம் போல உள்ள மெஷினில் கைரேகையை பதிவு செய்தால், 2 நிமிடத்தில் பாஸ்போர்ட் கிடைக்கும். இதை 10 பேர் கொண்ட குழுவினர் சென்று பார்த்து வந்துள்ளோம்.இதற்கு போலீசாரின் ஒத்துழைப்பு மிக அவசியம்.

ஒருவர் பற்றிய குற்றத்தகவல்களை உடனுக்குடன் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அப்போதுதான் குற்றவாளிகள் பற்றிய தகவல்கள் உடனுக்குடன் கிடைக்கும். இந்தமுறை அமல் செய்யப்பட்டால் பாஸ்போர்ட் வழங்கும்போது போலீஸ் ‘வெரிபிகேசன்‘ தேவைப்படாது.இத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தீவிரமாக உள்ளது. போலீசார் ஒத்துழைத்தால் இத்திட்டம் விரைவில் சாத்தியப்படும். பாஸ்போர்ட் எடுக்கும் நேரம், காலம் மிச்சமாகும் என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement