Ad Code

Responsive Advertisement

பிளஸ் 2 துணைத் தேர்வு: விடைத்தாள் நகல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

பிளஸ் 2 துணைத் தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள், இணையதளம் மூலம் விடைத்தாள் நகலினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வாசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளது:

செப்டம்பர் மற்றும் அக்டோபர் 2014இல் 2 துணைத் தேர்வெழுதி, விடைத்தாள்களின் நகல் கோரி விண்ணப்பித்த தனித் தேர்வர்கள், 5.11.2014 காலை 10 மணி முதல் 6.11.2014 மாலை 5 மணி வரை, ள்ற்ன்க்ங்ய்ற்.ட்ள்ங்14ழ்ற்ழ்ஸ்.ண்ய் என்ற இணையதளத்துக்குள் சென்று, தங்களது பதிவெண் மற்றும் விண்ணப்ப எண்ணை பதிவு செய்து, தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு, மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், இதே இணையதள முகவரியில் அல்ல்ப்ண்ஸ்ரீஹற்ண்ர்ய் ச்ர்ழ் தங்ற்ர்ற்ஹப்ப்ண்ய்ஞ் தங்ஸ்ஹப்ன்ஹற்ண்ர்ய் என்ற தலைப்பினை அழுத்தி, விண்ணப்பித்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும்.

இந்த விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து, இரு நகல்கள் எடுத்து 7.11.2014 காலை 10 மணி முதல் 8.11.2014 பிற்பகல் 1 மணிக்குள், உரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கான கட்டணத்தினை முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் பணமாகச் செலுத்தவேண்டும் எனத் தெரிவித்துள்ளார் முதன்மைக் கல்வி அலுவலர் வாசு.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement