Ad Code

Responsive Advertisement

1,800 முதுகலை ஆசிரியரை நியமிக்க விரைவில் டி.ஆர்.பி., போட்டி தேர்வு

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 1,800 முதுகலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,), விரைவில் போட்டித் தேர்வு அறிவிப்பை வெளியிட உள்ளது. தரம் உயர்த்தப்பட்ட, 100 மேல்நிலைப் பள்ளிகளில், 900 முதுகலை ஆசிரியரை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில், 450 ஆசிரியர், பதவி உயர்வு மூலம் சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டனர்.
மீதமுள்ள, 450 பணியிடங்களை, நேரடி போட்டித் தேர்வு மூலம் நிரப்பிட, தமிழக அரசு முடிவு செய்து உள்ளது. மேலும், 2013 - 14ம் கல்வியாண்டில் ஏற்பட்ட காலிப் பணியிடம் உட்பட, மொத்தம் 1,800 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, தேர்வு நடத்தப்பட உள்ளது. இதுகுறித்த அறிவிப்பை, டி.ஆர்.பி., ஓரிரு நாளில் வெளியிடும். போட்டித் தேர்வு, வரும் பிப்ரவரி அல்லது மார்ச்சில் நடக்கும். தேர்வு செய்யப்படுவோரை, அடுத்த கல்வியாண்டில் பணி நியமனம் செய்திட, பள்ளி கல்வித் துறை முடிவு செய்து உள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement