Ad Code

Responsive Advertisement

பாட புத்தகங்களை எடைக்கு விற்றுரூ.14 லட்சம் பெற்றது யார்?பலிகடாவாகிறார் வியாபாரி?

கோவையில், 350 டன் பள்ளி பாடப் புத்தகங்கள் மாயமான விவகாரத்தில், புத்தகங்களை எடை போட்டு வாங்கிய வியாபாரியை தேடி, தனிப்படையினர் கோவில்பட்டியில் முகாமிட்டுள்ளனர்.தமிழக அரசு, 2011ம் ஆண்டு கோவை மாவட்டத்துக்கு அனுப்பி வைத்த சமச்சீர் கல்வி அல்லாத, 350 டன் எடை கொண்ட பாடப் புத்தகங்கள், அரசுக்கு தெரியாமல், எடைக்கு விற்பனை செய்யப்பட்டது, விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, அப்போதைய கோவை சி.இ.ஓ., ராஜேந்திரன், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.விசாரித்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், சி.இ.ஓ., ராஜேந்திரன் உட்பட ஏழு பேர் மீது வழக்கு பதிந்தனர். இது தொடர்பாக, இளநிலை உதவியாளர் சரவணன் மற்றும் பதிவு எழுத்தர் சேதுராமலிங்கம் கைது செய்யப்பட்டு, தற்காலிக பணி நீக்கமும் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும், புத்தகங்களை, லாரி மூலம், சிவகாசி கொண்டு சென்று விற்றது தெரிய வந்துள்ளது.மாநகர குற்றப்பிரிவு போலீசார் கூறியதாவது:பள்ளி பாடப் புத்தகங்களை கிலோ 4 ரூபாய்க்கு விற்று, 14 லட்சம் ரூபாய் லாபம் அடைந்துள்ளனர். சிவகாசியில் பட்டாசு தயாரிக்கவும், பழைய பேப்பர் கடைகளுக்கும் புத்தகங்கள் சப்ளை செய்யப்பட்டுள்ளன.அரசு புத்தகங்கள் என்று தெரிந்தும் எடைக்கு வாங்கிய வியாபாரி, அதை கிலோ 7 ரூபாய் என்ற கணக்கில் விற்றுள்ளார். அவரைத் தேடி, கோவில்பட்டியில் தனிப்படை போலீசார் முகாமிட்டுள்ளனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement