Ad Code

Responsive Advertisement

சிறுபான்மை பாட 144 இடைநிலை ஆசிரியர் நாளை பணி நியமனம்

தொடக்க கல்வி துறைக்கு தேர்வு பெற்றுள்ள, சிறுபான்மை மொழிப்பாட இடைநிலை ஆசிரியர், 144 பேர், நாளை நடக்கும் இணையதள வழி கலந்தாய்வில், நியமனம் செய்யப்படுகின்றனர். ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,), தொடக்க கல்வி துறைக்கு, தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது ஆகிய சிறுபான்மை மொழிப்பாடங்களுக்கு,  ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான, பணி நியமன கலந்தாய்வு, நாளை (8ம் தேதி) காலை, 9:00 மணி முதல், இணையதள வழியில் நடக்கிறது.

இது குறித்து, தொடக்க கல்வி இயக்குனர், இளங்கோவன் வெளியிட்ட அறிவிப்பில், ''சம்பந்தபட்டவர்கள், டி.இ.டி., தேர்வு ஹால் டிக்கெட்டில் இடம்பெற்றுள்ள முகவரியின் அடிப்படையில், சம்பந்தபட்ட மாவட்ட தொடக்க கல்வி அலுவலகங்களில் ஆஜராக வேண்டும். அசல் சான்றிதழ்கள் மற்றும் இரண்டு 'செட்' நகல்களை கொண்டு வர வேண்டும்,'' என, அறிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement