Ad Code

Responsive Advertisement

100 சதவீத தேர்ச்சிக்கு உழைக்காத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை - இணை இயக்குனர் கார்மேகம்

''பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வில், 100 சதவீத வெற்றிக்கு உழைக்காத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கல்வித்துறை தயங்காது,'' என, மெட்ரிக் பள்ளிகளின் இணை இயக்குனர் கார்மேகம் எச்சரித்துள்ளார்.

கடந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், 80 சதவீதம் அதற்கு குறைவான தேர்ச்சியை பெற்ற அரசு பள்ளிகளின், ஆசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் காரைக்குடியில் நடந்தது. முதுகலை ஆசிரியர்கள் ஆய்வு கூட்டத்தில் மெட்ரிக் பள்ளிகளின் இணை இயக்குனர் கார்மேகம் ஆலோசனை வழங்கினார்.

அவர் பேசியதாவது:பிளஸ் 2 வில், 80 சதவீத தேர்ச்சி என்பது போதாது.100 சதவீத தேர்ச்சியை பெற ஆசிரியர்கள் கடுமையாக உழைக்கவேண்டும். படிப்பில் பின்தங்கிய மாணவர்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். கல்வித் துறை ஆலோசனைகளை பெற வேண்டும். அடுத்த பொதுத் தேர்விற்குள் இன்னொரு முறை ஆய்வுக் கூட்டம் நடத்தப்படும். இதில், தேவையான ஆலோசனைகள் வழங்கப்படும் இதன் பின்னரும், 100 சதவீத தேர்ச்சியை எட்டாத பள்ளி களில் பணிபுரிந்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கல்வித்துறை தயங்காது.இவ்வாறு, அவர் பேசினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement