மாணவர்களுக்கு பாடங்களை எளிதில் புரிய வைப்பதற்காக எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு நடத்தும் ஆசிரியர்களுக்கு அனிமேசன் பயிற்சி 10, 11 தேதிகளில் சென்னையில் நடக்கிறது.
எஸ்.எஸ்.எல்.சி.தேர்ச்சி
எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில் வழக்கத்தை விட கடந்த வருடம் தமிழ்நாட்டில் தேர்ச்சி சதவீதம் அதிகரித்தது. அதே போல இந்த வருடமும் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார்.
ஆசிரியர்களுக்கு பயிற்சி
2014-2015ம் கல்வி ஆண்டில் தங்கள் மாவட்டத்தில் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் எஸ்.எஸ்.எல்.சி.வகுப்பு கணித பாடத்தை சிறப்பாக கற்பிக்கும் திறன் கொண்ட 3 ஆசிரியர்களை அனுப்பி வையுங்கள்.
அவர்களுக்கு சென்னை டி.பி.ஐ.வளாகத்தில் உள்ள மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன அரங்கில் 10 மற்றும் 11 தேதிகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.
அந்த பயிற்சி குறித்து பள்ளிக்கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
அனிமேசன்
எஸ்.எஸ்.எல்.சி. பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு அனிமேசன் பயிற்சி அளிக்கப்படுகிறது. உதாரணமாக கம்ப்யூட்டர் மூலம் அனிமேசன் பயிற்சி அளிக்கப்படுகிறது. அனிமேசன் மூலம் கணிதத்தை மாணவர்கள் எளிதில் நேரடியாக புரியும் வகையில் கற்பிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மாவட்டத்திற்கு 3 பேர்களை தேர்ந்து எடுத்து 100 ஆசிரியர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சி பெற்ற பிறகு அந்த ஆசிரியர்கள் அந்தந்த மாவட்டத்தில் மற்ற ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள். இதுபோல அறிவியல் உள்ளிட்ட மற்ற பாடங்களிலும் பயிற்சி அளிக்கப்படும் பயிற்சியால் மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி.தேர்வில் அதிக தேர்ச்சி பெறுவார்கள்.
இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை