Ad Code

Responsive Advertisement

TET தகுதித் தேர்வு அறிவிப்புக்காக காத்திருக்கும் ஆசிரியர்கள்.

ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்படும் தகுதித் தேர்வு அறிவிப்பிற்காக அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர். 

கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்படும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் அரசு பள்ளிகளில் ஆசிரியராக முடியும். மேலும், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் கடந்த 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு பணியில் சேர்ந்தவர்கள் 2016ம் ஆண்டுக்குள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இல்லையேல் ஊதியம் வழங்கபடமாட்டது, என அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தது ஆண்டிற்கு ஒரு முறையாவது ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் தகுதி தேர்வு நடத்தப்பட வேண்டும். ஆனால் இந்த ஆண்டிற்கு இதுவரை தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாக வில்லை.இதனால் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடை நிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பி.எட்., முடித்த புதிய பட்டதாரிகள் தகுதி தேர்வு அறிவிப்பிற்காக காத்திருக்கின்றனர்.

Post a Comment

1 Comments

  1. Tet paper1 adw school selection list eppa viduvanga sir?

    ReplyDelete

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..

நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை

Ad Code

Responsive Advertisement