Ad Code

Responsive Advertisement

TET நலத்துறை காலிப்பணியிடங்களை நிரப்ப கோரி போராட்டம்.

TET இறுதி தேர்வு பட்டியலை வெளியிட வலியுறுத்தி ஆசிரியர் பயிற்சி பெற்ற பட்டதாரிகள் போராட்டம்.


           
இறுதி தேர்வு பட்டியலை வெளியிட வலியுறுத்தி, சென்னையில் ஆசிரியர் தேர்வு வாரியம்முன் ஆசிரியர் பயிற்சி பெற்ற பட்டதாரிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

         நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரை சந்திக்க அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், கடந்தாண்டு ஆகஸ்ட் 17 மற்றும் 18-ஆம் தேதிகளில் நடந்த தகுதி தேர்வு நடைபெற்ற நிலையில், பள்ளிகல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறைகளில் மட்டும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

           மேலும் ஆதிதிராவிடர் நலத்துறை, சிறுபான்மை மொழி உள்ளிட்ட துறைகளில் ஆயிரத்து 260 பணி இடங்களுக்கான தேர்வு பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர். அதனால், உடனடியாக இறுதி தேர்வு பட்டியலை வெளியிட வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement