Ad Code

Responsive Advertisement

இரவு பாடசாலை திட்டத்தை TET தேர்ச்சி ஆசிரியர்களைக் கொண்டு செயல்படுத்த வலியுறுத்தல் - முதல்வருக்கு மனு

 காமராஜர் இரவு பாடசாலை திட்டத்தை, டி.இ.டி.,யில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு செயல்படுத்த வேண்டும் என பட்டயப் பயிற்சி பெற்ற வேலையில்லா ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, கூட்டமைப்பு செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: ஆசிரியர் பயிற்சி முடித்த நாங்கள் 6 ஆண்டு காலமாக வேலையில்லாமல் சிரமப்பட்டு வருகிறோம். இதற்கிடையில், அரசு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே இனி வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தது. தற்போது பட்டயப் பயிற்சி பெற்ற, 252 ஆசிரியர்கள் டி.இ.சி.யில் தேர்ச்சி பெற்று வேலை வாய்ப்பு இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

தேர்தல் அறிக்கையில் அறிவித்தவாறு, ஆசிரியர் பயிற்சி முடித்த வேலை இல்லாத இளைஞர்களுக்கு, பகுதி நேர வேலை கிடைக்கும் வகையில், காமராஜர் இரவு பாடசாலை திட்டத்தை 90 மதிப்பெண் பெற்று, டி.இ.டி.,யில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பகுதி நேர ஆசிரியராக பணி வழங்கினால், 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை குறைந்த ஊதியம் பெற்று, அரசு பள்ளி மாணவர்கள் வளர்ச்சிக்காக பணியாற்ற தயாராக உள்ளோம். எனவே, டி.இ.டி.,யில் தேர்ச்சி பெற்ற எங்களுக்கு இரவு பாடசாலை ஆசிரியர் பணியை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனு வில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement