Ad Code

Responsive Advertisement

Flipkart சில குழப்பங்களும், தெளிவுகளும்...

Flipkart-லிருந்து Apologies, from Flipkart- னு ஒரு 'வருத்தப்பட்டு பாரம் சுமந்த' மின்னஞ்சல் வந்தது. ‪#‎BigBillionDay‬ அன்றைய Worst Customer experience க்காக. 150mb இன்டெர்நெட்டை வீண்டித்ததற்கு ஒரு சின்ன ஆறுதல். அன்று அவர்கள் வெப்சைட்டை access பண்ண முடியாமல் போனதற்காக சொன்ன காரணம் அனைத்தும் உண்மை. ஆனால் Out of Stocks பற்றி சொன்னது நகைப்புக்குறியது. சுத்த பேத்தல். சரி விஷயத்துக்கு வருவோம். சற்றே நீளமான பதிவு. பொறுத்தருளவும்.

Amazon.com- ல் பணிபுரிந்த சச்சின் பன்சால் & பின்னி பன்சாலால் 2007-ல் துவங்கப்பட்டது ‪#‎Flipkart‬. ஆரம்பத்தில் புத்தகங்களை மட்டுமே விற்ற நிறுவனம் படிப்படியாக உயர்ந்து இன்று இந்திய இ-காமர்ஸ் சந்தையில் தவிர்க்க முடியாத நிறுவனமாக நிற்கிறது. Flipkart-ன் இன்றைய மொத்த மதிப்பு சுமார் $1 billion USD.. இந்தியாவின் Top ten most visited website-களில் Flipkart-ம் ஒன்று. #BigBillionDay என்று ஒரே நாளில் 600 கோடி ரூபாய்க்கு பொருட்களை விற்றுத்தள்ளியது இந்திய இ-காமர்ஸ் சந்தையில் ஒரு மைல் கல்.

Flipkart ஒரு இந்திய நிறுவனமா என்றால், இல்லை. சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட, Tiger Global, Intervision Holdings, IDG Ventures, Accel, Sofina, Vulcan Capital, DST Asia, DGF Bravo, Erasmic Ventures, Iconiq Strategic Partners, Helion Ventures, Morgan Stanley and Fidelity உள்ளிட்ட பல சிங்கப்பூர் – இந்திய - அமெரிக்க முதலீட்டு நிறுவனங்களின் கூட்டு தயாரிப்புதான் Flipkart. இதில் வெளிநாட்டு முதலீடுதான் பெரும்பான்மை என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் Flipkart-ஐ ஒரு சுதேசி நிறுவனம் என்பது தவறு.
.

சரி, ஒவ்வொரு காலாண்டுக்கும் 100% க்கும் மேல் வளர்ந்து வரும் (on sales report basis), நாளொன்றுக்கு சராசரியாக ஒண்ணேகால் லட்சம் பொருட்களை விற்கும், Flipkart லாபத்தில் இயங்குகிறதா என்றால், இல்லை. பெரும்பாலான offers, Flipkart-ன் கண் மண் தெரியாத முரட்டுத்தனமான முதலீடுதான். கடந்த நிதியாண்டில் மட்டும் சுமார் 282 கோடி ரூபாய் நஷ்டம். ஆனாலும் அசராமல் பல கோடிகளை தொடர்ந்து முதலீடு செய்துகொண்டிருக்கிறார்கள். காரணம் இந்தியாவின் இ-காமர்ஸ் சந்தை Just born baby. அது வளரப்போகும் உயரத்தை அறிந்துதான் கோடிகளை கொட்டுகிறார்கள்.Flipkart IPO கொண்டு வந்தால் அதன் அடுத்த விஸ்வரூபத்தை பார்க்கலாம்.
இப்படி கண்டபடி முதலீடு செய்வதற்கு மிக முக்கிய காரணம் போட்டியாளர்களை ஒழிப்பது. போட்டியாளர்கள்னா அமேசானும் ஸ்னாப்டீலும் அல்ல. நாடு முழுவதும் உள்ள சில்லறை வணிகர்கள்.

ஆனால் Flipkart-ன் இந்த குறைந்த விலை பாணி, விளம்பர தந்திரம் எவ்வளவு நாளுக்கு செல்லுபடியாகும் என்றால், ஒன்று அவர்களின் முதலீட்டாளர்கள் கழுத்தைப் பிடிக்கும் வரை. அல்லது நாட்டிலுள்ள சிறு வணிகர்களை ஒழித்துக்கட்டும் வரை. இரண்டாவது நடந்தால் நாம் அடிமையாகிவிட்டோம் என்று அர்த்தம். மொத்த சந்தையும் மிகச் சில இ-காமர்ஸ் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் போய்விடும். நாட்டின் சில்லறை வணிகத்தின் Importer* > Distribution > Dealer > Retail shops > Customer என்ற சங்கிலித்தொடர் அறுந்து விழும். பல கோடி பேர் வேலை இழப்பார்கள். இதே காரணத்தல்தான் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடை எதிர்த்தோம்.

கம்ப்யூட்டர் மட்டுமே இருந்த வரை இந்த ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்டுகளால் சில்லரை விற்பனையில் எந்த பாதிப்பும் இல்லை. 2000 ரூபாய் ஆன்ட்ராய்ட் போனில் Flipkart App வழியே 16GB பென்டிரைவை 240 ரூபாய்க்கு நம்மாட்கள் வாங்க ஆரம்பித்ததும்தான் தொடங்கியது தலைவலி. இன்று செருப்பு கடையிலிருந்து, Fashion Jewellery, எலக்ட்ரானிக்ஸ் கடை வரை Flipkart, Amazon, Snapdeal - ஐ தான் ஒப்பிடுகிறார்கள். பல பெரிய பெரிய மின்சாதன தயாரிப்பு நிறுவனங்களே தங்கள் நிறுவன பொருட்களின் சந்தை விலைக்கும் ஆன்லைன் விலைக்கும் உள்ள கணிசமான வேறுபாட்டைக் கண்டு கலங்கிப்போய் உள்ளார்கள். இனி இ-காமர்ஸை புறந்தள்ள முடியாது. ஆனால் அரசும், உற்பத்தி நிறுவனங்களும் நினைத்தால் எளிதில் கட்டுப்படுத்தலாம்

சமீபத்திய #BigBillionday கூத்துகளால் ஏமாந்தவர்களின் சராமாரி புகார் மற்றும் விலை, வரி குறித்த சந்தேகங்களால் Flipkart மேல் விசாரணையை முடுக்கிவிட அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. FDI சட்டப்படி Flipkart அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் Multi Brand பொருட்களை விற்கக் கூடாது. அதனால் WS Retail என்ற பெயரில் விற்று வந்தது. இந்த விதிமீறல் குறித்து 2012 ல் அரசு விசாரிக்கத் துவங்க தொடங்கியதும் பலவேறு நெருக்குதல்களுக்குப் பிறகு அந்நிறுவனத்தை விற்றது. ஆனால் இன்றும் சுமார் 80% பொருட்கள் WS Retail மூலமே விற்கப்படுவதை பார்க்கும்போது ’விற்றது’ ஒரு சடங்குதான் என புரியும்.

FDI Law violations, 'Money laundering' போன்ற கடுமையான குற்றச்சாட்டுகள் Flipkart மேல் உள்ளது. FEMA (Foreign Exchange Management Act) Violations நிரூபிக்கப்பட்டால் 1400 கோடி ரூபாய்ககும் மேல் அபராதம் கட்ட வேண்டும்.அமலாக்கத்துறை, வருமான வரித்துறையின் தீவிர கண்காணிப்பின் கீழ் உள்ள இந்நிறுவனத்தோடு மற்ற இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கும் இந்திய அரசு சரியான கடிவாளம் போடவில்லையென்றால் அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும்

-Shan Nawaz

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement