Ad Code

Responsive Advertisement

இந்த வாரம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை?

கனமழை மற்றும் தீபாவளி பண்டிகை காரணமாக, பள்ளிகளுக்கு, இந்த வாரம் முழுவதும், விடுமுறை கிடைக்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. நாளை 22ம் தேதி, தீபாவளி பண்டிகை. நாளை மறுநாள், 23ம் தேதி, பெண்கள் நோன்பு இருந்து, கோவிலில் சிறப்பு வழிபாடு செய்வர்.
இதனால், பல தனியார் பள்ளிகளில், ஏற்கனவே, தொடர்ந்து, இரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில், கனமழை காரணமாக, நேற்று, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருச்சி உட்பட, 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. 'தொடர்ந்து, மேலும், இரு நாட்களுக்கு மழை நீடிக்கும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்திருப்பதால், பல மாவட்டங்களில், பள்ளிகளுக்கு, இன்றும் விடுமுறை அறிவிப்பதற்கு, அதிக வாய்ப்புகள் உள்ளன. வாரத்தின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை அன்று, மழை வந்தாலும், வராவிட்டாலும், அன்றைக்கும், விடுமுறை அறிவித்து விட்டு, சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பின், 27ம் தேதி முதல், பள்ளியை திறக்க, தனியார் பள்ளிகள் முடிவு செய்துள்ளன. எனவே, இந்த வாரம் முழுவதும், மாணவர்களுக்கு கொண்டாட்டம் தான்!

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement