Ad Code

Responsive Advertisement

ஆசிரியர்களுக்கான சிறப்பு குறைதீர் முகாம் குறித்த சுற்றறிக்கை

ஆசிரியர்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு முகாமை, ஒவ்வொரு மாதமும், முறையாக நடத்துவது தொடர்பாக, ஒரு சுற்றறிக்கையை, மாவட்ட அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வித் துறை அனுப்பி உள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: மாதத்தின் முதல் சனிக்கிழமை, மாவட்ட கல்வி அலுவலர் நிலையிலும், இரண்டாவது சனிக்கிழமை, முதன்மைக் கல்வி அலுவலர் நிலையிலும், ஆசிரியர் குறை தீர்ப்பு முகாமை நடத்த வேண்டும். இதில், ஆசிரியர்கள் பங்கேற்று, தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.

முதல் இரு முகாம்களிலும் தீர்க்க முடியாத பிரச்னையை, மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை, இயக்குனர் அலுவலகத்தில் நடக்கும் முகாமிற்கு, மாவட்ட அதிகாரிகள் பரிந்துரைக்கலாம். ஆசிரியர்கள் எந்தக் காரணங்களுக்காகவும், வேலை நேரத்தில், கல்வித்துறை அலுவலகங்களுக்கு வரக்கூடாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனரகம் தெரிவித்திருப்பதற்கு மாறாக, தினமும் ஏராளமான ஆசிரியர்கள், பல்வேறு பிரச்னைகளுக்காக, இயக்குனர் அலுவலகங்களில் முகாமிடுவது வழக்கமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement