Ad Code

Responsive Advertisement

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் கணினி பயிற்றுநர் பணிக்கு பரிந்துரை

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிப்பு செய்யப்பட்டுள்ள தொழிற்கல்வி கணினி பயிற்றுநர் பணிக்காலியிடத்திற்கு விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தகுதியானவர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட இருக்கிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தொழிற்கல்வி பயிற்றுநர் காலியிடத்திற்கு குறிப்பிட்டுள்ள கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும். பி.எஸ்.சி(கணிப்பொறி அறிவியல்), பி.சி.எ அல்லது பி.எஸ்.சி(தகவல் தொழில் நுட்பம்) ஆகிய பட்டப்படிப்புடன், பி.எட் கல்வித் தகுதியிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பதிவு மூப்பு அடிப்படையில் பரிந்துரை செய்யப்படும் விவரம் வருமாறு:

அனைத்து முன்னுரிமை பிரிவினர்கள்(மாற்றுத்திறனாளிகள் உள்பட) நாளது தேதி வரையிலும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பொதுப்பிரிவினர் ஆகியோருக்கு 31.12.2008 வரையும், ஆதிதிராவிடர், அருந்ததியினருக்கு 31.12.2010 வரையும், பழங்குடியினருக்கு நாளது தேதி வரையில் பதிவுதாரர்கள் பரிந்துரைக்கப்படவுள்ளனர்.

மேற்குறிப்பிட்ட பதிவு மூப்புடைய அனைத்து பதிவுதாரர்களும் பெயர் பரிந்துரை தொடர்பான விவரங்களை அறிந்து கொள்வதற்கு சூலக்கரை தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு 29-ஆம் தேதி நேரில் வரவேண்டும்.

அப்போது, வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் அசல் கல்வி தகுதிக்கான சான்றுகள், குடும்ப அட்டை ஆகியவைகளை கட்டாயம் கொண்டு வர வேண்டும். எனவே குறிப்பிட்ட நாளுக்கு பின் வருகிறவர்களின் கோரிக்கைகள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement