Ad Code

Responsive Advertisement

போன் பைத்தியமா?

ஸ்மார்ட்போன் பக்கத்தில் இருந்தால் அடிக்கடி கையில் எடுத்துப் பார்க்கத் தோன்றும். மெயில் பார்க்க, குறுஞ்செய்தி பார்க்க, பேஸ்புக் அல்லது வாட்ஸ்அப் பார்க்க என்று ஸ்மார்ட்போனைப் பார்த்துக்கொண்டே இருப்பது பலருக்கு வழக்கமாகிவிட்டது. இதன் விளைவாகச் சிலருக்குக் கால் வராதபோதும் போனை எடுத்துப் பார்க்கத் தோன்றலாம்.

சரி, நீங்கள் எத்தனை முறை ஸ்மார்ட்போனை எடுத்துப் பார்க்கிறீர்கள் என்று அறிய விருப்பமா? அதற்காகவே ஒரு செயலி அறிமுகமாகி இருக்கிறது. செக்கி (http://www.checkyapp.com/) எனும் அந்த ஆப்ஸ், நீங்கள் எத்தனை முறை போனை அன்லாக் செய்கிறீர்கள் என்று கண்டறிந்து சொல்கிறது. ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் இரண்டிலும் இது செயல்படுகிறது.

எத்தனை முறை போனை அன்லாக் செய்கிறீர்கள் என்று மட்டும் அல்ல எதற்காக எல்லாம் போனைப் பயன்படுத்துகிறீர்கள் என்றும் அறியலாம்!

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement