Ad Code

Responsive Advertisement

பள்ளிகளில் அடுத்த வாரம் 'கொடுத்து மகிழும் வாரம்'

 அக்., இரண்டாவது வாரம், பள்ளிகளில், 'கொடுத்து மகிழும் வாரம்' கொண்டாடப்பட உள்ளது, மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், முதல் வகுப்பு முதல் பிளஸ்2 வரை பயிலும் மாணவ, மாணவியரிடையே நேச மனப்பான்மையை ஏற்படுத்த, சமூக ஏற்றத்தாழ்வுகளை மறந்து, ஒருவருக்கொருவர் இணைந்து, பரிசையும் கருத்துக்களையும் பரிமாற, ஏழை மக்களுக்கு உதவும் என, பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, அக்., 2ம் தேதியில் இருந்து 8ம் தேதி வரை, அனைத்து பள்ளிகளிலும், கொடுத்து மகிழும் வாரம் கொண்டாட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்துமாறு, பள்ளி கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில், தங்கள் மனங்கவர்ந்த ஆசிரியர்களின் பணியை பாராட்டி, நன்றியோடு, கட்டுரை எழுதலாம். மாணவர்களின் வசிப்பிடத்துக்கு அருகில் வசிக்கும் ஆதரவற்றோர், இயலாதவர்களுக்கு, தங்களால் முடிந்த பரிசுப் பொருட்களை கொடுத்து உதவலாம் என்பன உட்பட பல்வேறு வித்தியாசமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.இந்நிலையில், அக்., 6ம் தேதி வரை, முதற்பருவத் தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அக்., இரண்டாவது வாரம், 'கொடுத்து மகிழும் வாரம்', பள்ளிகளில் கடைபிடிக்கப்பட உள்ளது. பள்ளிகளில் கொண்டாடப்பட்ட விபரத்தை, பள்ளி கல்வி இயக்குனருக்கு தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement