Ad Code

Responsive Advertisement

வந்தாச்சு ஆண்ட்ராய்டு லாலிபாப்!!!

 கூகுள், நெக்சஸ் ஸ்மார்ட் போன் மற்றும் டேப்லெட்டுடன் ஆண்ட்ராய்டின் அடுத்த வர்ஷனான ஆண்ட்ராய்டு லாலிபாப்பை அறிமுகம் செய்துள்ளது. இந்தப் புதிய இயங்கு தளம் (ஒ.எஸ்) எல்லா வகையான சாதனங்களிலும் சீரான அனுபவத்தைத் தரவல்லது என கூகுள் சொல்கிறது.


இதில் நோட்டிஃபிகேஷன் பெறுவதைக் கட்டுப்படுத்தும் வசதி இருக்கிறது. போனைப் பயன்படுத்தும்போது கால் வந்தால் இடையூறாகத் தோன்றாது. நோட்டிஃபிகேஷன் யாரிடம் இருந்து வருகின்றன என்பதைப் பொறுத்துப் புத்திசாலித்தனமாக ரேங்க் செய்யப்படும்.

பேட்டரி சேமிப்பு வசதி கூடுதலாக 90 நிமிட நேரத்தை அளிக்கக் கூடியது. பாதுகாப்புக்காக என்க்ரிப்ஷன் வசதி இருக்கிறது. மேலும் ஒரே போனைப் பலர் பயன்படுத்தலாம். இதில் உள்ள கெஸ்ட் யூசர் வசதியைக் கொண்டு மற்றவர்களுக்கு போனைப் பயன்படுத்த கொடுக்கலாம். அவர்கள் போனை மட்டுமே பயன்படுத்த முடியும், அதில் உள்ள தகவல்களை அல்ல; டெஸ்க்டாப்பிற்கு நிகரான செயல்பாட்டைத் தரக்கூடியது. தமிழ் உள்ளிட்ட 68 மொழிகளில் பயன்படுத்தலாம். இவை எல்லாம் ஆண்ட்ராய்டு லாலிப்பாபின் சிறப்பம்சமாகச் சொல்லப்படுகின்றன.

எல்லாம் சரி, அதென்ன லாலிபாப் என்று பெயர்? ஆண்ட்ராய்டு 1.5 முதல் தொடங்கி எல்லா வர்ஷன்களுக்கும் கப்பேக், டோனெட், சாண்ட்விச், ஜெல்லிபீன், கிட்காட் என எல்லாமே இளைஞர்களுக்குப் பிடித்த உணவுப் பொருட்களின் பெயர்தான். அந்த வரிசையில் இப்போது லாலிபாப்.

அது மட்டுமல்ல, ஆண்ட்ராய்டின் ஒவ்வொரு வர்ஷனுக்கும் கூகுளின் தலைமை அலுவலகத்தின் முன் அந்த வர்ஷன் அடையாளத்துடன் ஆண்ட்ராய்டு சிலை நிறுவப்படுவதும் வழக்கம். லாலிபாப் சிலையும் இப்போது அங்கே அலங்கரிக்கிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement