Ad Code

Responsive Advertisement

அரசு மகளிர் விடுதிகளில் தங்க விண்ணப்பிக்கலாம்

சென்னையில் உள்ள அரசு மகளிர் விடுதிகளில் தங்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் எ. சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி: சென்னையில் பணிபுரியும் மகளிர் தங்குவதற்கான அரசு விடுதிகள் சென்னை மாவட்ட சமூக நல அலுவலர் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன. இதில் ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 30 ஆயிரம் வரை மாதச் சம்பளம் பெறும் மகளிர், விடுதியில் தங்க அந்தந்த விடுதிகளில் தொடர்பு கொண்டு விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அரசு மகளிர் விடுதிகள் விவரம் முகவரி தொடர்பு எண்

58, சின்னகுழந்தை பிரதான சாலை, மடுமாநகர்,மூலக்கடை, பெரம்பூர், சென்னை - 11 9840604968

49, பாலகிருஷ்ணன் சாலை, வியாசர்பாடி, சென்னை - 39 9840279866

பிளாட் எண் 13, பு.எண் 1166, சடகோபன் நகர், சன்னதி தெரு, ஜல்லடம் பேட்டை, பள்ளிக்கரணை, சென்னை - 100 9840279866

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement