Ad Code

Responsive Advertisement

தனியார் பள்ளிகள் நாளை மூடல்: கூட்டமைப்பு நிர்வாகிகள் அறிவிப்பு

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரி, தனியார் பள்ளிகள் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 7) மூடப்படும் என தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் வி.கோவிந்தராஜு, செயலர் டி.சி.இளங்கோவன், பொருளாளர் எஸ்.டி.சந்திரசேகர் ஆகியோர் சேலத்தில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை மேலும் கூறியது:

அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா, தமிழக முதல்வராக பணியாற்றிய கடந்த 3 ஆண்டுகளில் கல்வித் துறை வளர்ச்சிக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வந்தார்.

மாணவ-மாணவிகளுக்கான நலத் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்தார்.

மேலும், அனைவரும் கல்வி பெறக்கூடிய வகையில் 2023 தொலைநோக்குத் திட்டத்தையும் அவர் நிறைவேற்றி வருகிறார். இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்தும், அவரை விடுதலை செய்யக் கோரியும் தனியார் பள்ளிகள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகிகள், முதல்வர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். எனவே, தமிழகத்தில் உள்ள சுமார் 4,500 தனியார் பள்ளிகளுக்கும் செவ்வாய்க்கிழமை விடுமுறை அளிக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement