Ad Code

Responsive Advertisement

அரசு பள்ளியில் புத்தகம் கொண்டு வராத மாணவனுக்கு பிரம்படி: ஆசிரியர் மீது வழக்கு

 தக்கலை சரல்விளையை சேர்ந்தவர் முகமதுபிலால். இவரது மகன் அப்துல் நியாஸ் (வயது 14) தக்கலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9–ம் வகுப்படி படித்து வருகிறார்.

நேற்று அப்துல் நியாஸ் வழக்கம்போல பள்ளிக்கு சென்றார். அப்போது புத்தகம் கொண்டு வரவில்லை என கூறி அப்துல் நியாசை சமூக அறிவியல் ஆசிரியர் பிரம்பால் அடித்ததாக தெரிகிறது. இதில் அப்துல் நியாசின் கை, கழுத்தில் காயம் ஏற்பட்டது. மாலையில், அப்துல் நியாஸ் அழுது கொண்டே வீட்டுக்கு சென்றார். இதைப் பார்த்து தாயார் கேட்டபோது பள்ளியில் நடந்த சம்பவங்களை கூறி அழுதார்.

இதையடுத்து மாணவனின் குடும்பத்தினர் பள்ளிக்கு சென்ற போது அங்கு ஒரு சில ஆசிரியர்கள் மட்டுமே இருந்துள்ளனர். அவர்கள் தங்களுக்கு எதுவும் தெரியாது எனக்கூறினர். இதையடுத்து அப்துல் நியாசை தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக அப்துல் நியாஸ் தக்கலை போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், சமூக அறிவியல் ஆசிரியர் சிவசேகர் தன்னை தகாத வார்த்தைகளால் திட்டி, பிரம்பால் தாக்கி காயப்படுத்தியதாக கூறி இருந்தார்.

புகாரின் பேரில் ஆசிரியர் சிவசேகர் மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சப்–இன்ஸ்பெக்டர் சுபாஷ் விசாரணை நடத்தி வருகின்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement