Ad Code

Responsive Advertisement

எப்பப் பார்த்தாலும் செல்போனில் பேச்சு - தலைமை ஆசிரியை மீது மாணவர்கள் புகார்

 சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியைக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

தலைமை ஆசிரியை நல்லம்மாள் எப்போது பார்த்தாலும் செல்போனில் பேசிக் கொண்டிருக்கிறார். ஆசிரியர்களை மதிப்பதில்லை என்றும் மாணவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள் மொத்தையனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் தான் நல்லம்மாள்.

இவர், கடந்த சில மாதங்களாக இந்த பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் பள்ளி செயல்படும் நாட்களில் காலதாமதமாக வருகிறார். அடிக்கடி பள்ளியை விட்டு வெளியே சென்றுவிடுகிறார்.

பள்ளியில் இருக்கும் நேரத்தில், மாணவர்களை கவனிக்காமல் யாருடனாவது மொபைல் போனில் பேசியபடியே உள்ளார். பாடம் தொடர்பாக பிள்ளைகள் சந்தேகம் கேட்டால், அவர்களைத் திட்டுவாராம்.

ஆசிரியர்களைக் கூட ஒருமையில்தான் கூப்பிடுவாராம்.இதனால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இடமாற்றம் செய்ய வேண்டும் எனறு மாணவர்கள் கூறுகிறார்கள்.

இதுதொடர்பாக மாணவர்களும், பெற்றோர்களும் சேர்ந்து சேலம் கலெக்டர் மகரபூசனத்தை சந்தித்து புகாரும் அளித்துள்ளனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement