Ad Code

Responsive Advertisement

இறுதியில் காக்கும் குருதி: இன்று தேசிய ரத்த தான தினம்


எதிர்பாராத விபத்து, மகப்பேறு, ஆபரேஷன், நோய் ஆகியவற்றின் போது,பாதிக்கப்பட்டவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது. உலகளவில் ரத்தத்தின் தேவை ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. இதனால் தேவைப்படும் ரத்தம், இன்னொருவர் தானம் செய்தவன் மூலம் மட்டுமே பெற முடியும். இதுவரை மனித ரத்தத்துக்கு மாற்றாக எதுவும் கண்டறியப்படவில்லை.  ரத்ததானம் செய்வதன் மூலம், யாரோ ஒருவருடைய உயிர் காப்பற்றப்படுகிறது. மேலும் மற்றொருவர் ரத்த தானம் செய்வதற்கும் வழிகாட்டியாக அமைகிறது. இன்று நீங்கள் ரத்த தானம் செய்தால், அது நாளை உங்களுக்கு கூட பயன்படலாம்.

பாதுகாப்பாக ரத்ததானம் செய்வது பற்றி போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அக்., 1ம் தேதி தேசிய ரத்ததான தினம் கடைபிடிக்கப்படுகிறது.

யார் ரத்தம் வழங்கலாம்:

நல்ல உடல்நிலையில் உள்ள 18 முதல் 60 வயது உள்ள எவரும் ரத்ததானம் செய்யலாம். உடலின் எடை 45 கிலோவுக்கு மேல் இருக்க வேண்டும். ரத்ததானம் கொடுக்கும் முன், ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, ஹீமோகுளோபின் ஆகியவற்றை சோதனை செய்த பின், ரத்ததானம் செய்ய வேண்டும். உடலின் வெப்பநிலை 37.50 டிகிரி செல்சியசுக்கு மிகாமல் இருக்க வேண்டும். சராசரியாக நமது உடலில் 5 லிட்டர் ரத்தம் இருக்கும். தானத்தின் போது, 350 மி.லி., ரத்தம் மட்டுமே உடம்பில் இருந்து எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதுவும் 2 நாட்களில் இழந்த ரத்தத்தை மீட்டு விடுகிறது. 2 மாதங்களில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை சரியான அளவுக்கு வந்து விடுகிறது. மூன்று மாதத்துக்கு ஒரு முறை ரத்ததானம் வழங்கலாம். 

பெறுபவருக்கு மட்டுமல்ல:

ரத்தம் வழங்குவதால் மற்றவர் பயன்பெற்றாலும், தானம் செய்பவர்களுக்கும் இது பலன் அளிக்கிறது. புதிதாக ரத்தத்தை உருவாக்கும் முயற்சியாகவும் இதை கருதலாம். இதனால் தானம் செய்த ரத்தத்தை இழந்ததாக கருத வேண்டியதில்லை. ரத்தத்தில் உள்ள இரும்புச்சத்தை சரியான அளவில் வைத்துக் கொள்ள ரத்ததானம் செய்வது உதவுகிறது. ரத்தத்தில் அதிகப்படியாக உள்ள கொழுப்பும் ரத்த தானம் செய்யும் போது சீரடைகிறது. ஒரு யுனிட் ரத்தத்தை மூன்று பகுதியாக பிரித்து தேவைப்படுபவர்களுக்கு ரத்த சிவப்பனுக்கள், பிளாஸ்மா, பிளேட்ளட்கள் என பயன்படுத்த முடியும். இதனால் மூன்று பேர் உயிரை ஒருவரால் காப்பாற்ற முடிகிறது. 

ரத்த தானத்தின் அவசியம்:

தினந்தோறும் நூற்றுக்கணக்கான பேருக்கு எதாவது ஒரு விதத்தில் ரத்தம் தேவைப்படுகிறது. பெரும்பாலான நேரங்களில், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலமே ரத்ததானம் செய்யப்படுகிறது. எனவே ரத்தானம் ஒவ்வொருவரும் தானாக முன்வந்து செய்தால் மட்டுமே, இந்தியாவில் தேவைப்படும் ரத்தத்தை பெற முடியும். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement