கார் மோதி பலத்த காயமடைந்த, உதவி தலைமை ஆசிரியருக்கு, 75 லட்சம் ரூபாய் இழப்பீட்டை 'லோக் அதாலத்' வழங்கியது. இதற்கான காசோலையை, ஆசிரியரின் மனைவியிடம், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, எஸ்.கே.கவுல் வழங்கினார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர், ஜேசுதாஸ், 57. இவர், எலத்தகிரியில் உள்ள, தூய அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியில், உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர், 2008 மார்ச் 24ம் தேதி, சென்னை பெங்களூரு நெடுஞ்சாலையில், இருசக்கர வாகனத்தில் சென்றபோது, கார் மோதி, பலத்த காயமடைந்தார். பெங்களூரு மருத்துவமனை உட்பட, சில மருத்துவமனைகளில், சிகிச்சை பெற்றும், உடலில், இடுப்புக்கு கீழ் செயல்படவில்லை. இந்த விபத்து தொடர்பான வழக்கு, கிருஷ்ணகிரி சார்பு நீதிமன்றத்தில், நடந்து வந்தது.
விசாரணை முடிவில், இழப்பீடாக, ஜேசுதாசுக்கு, இன்சூரன்ஸ் நிறுவனம்,70.89 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என, கடந்த மார்ச் மாதம், கிருஷ்ணகிரி சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து, இன்சூரன்ஸ் நிறுவனம், சென்னை உயர் நீதிமன்ற சட்டப் பணிகள் ஆணைக் குழு நடத்திய, 'லோக் அதாலத்'தில், மேல்மறையீடு செய்தது. ஜேசுதாசுக்கு, 75 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க,'லோக் அதாலத்' உத்தரவிட்டது. இத்தொகைக்கான காசோலையை, உதவி தலைமை ஆசிரியரின் மனைவி சிறியபுஷ்பம் சின்னராணியிடம், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, எஸ்.கே.கவுல், நேற்று வழங்கினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை