Ad Code

Responsive Advertisement

அக்., 28 மதுரை காமராஜ் பல்கலை பட்டமளிப்பு விழா : 300 பேருக்கு டாக்டர் பட்டம்

மதுரை காமராஜ் பல்கலை 48 வது பட்டமளிப்பு விழா அக்., 28ல் நடக்கிறது. கவர்னர் ரோசையா தலைமையில் காரைக்குடி 'சிக்ரி' இயக்குனர் விஜயமோகனன் பிள்ளை பட்டமளிப்பு விழா உரையாற்றுகிறார். உயர்கல்வி துறை அமைச்சர் பழனியப்பன், துணைவேந்தர் கல்யாணி பங்கேற்கின்றனர்.
பி.எச்டி., பட்டம் உட்பட உயர் ஆய்வு பட்டம் முடித்த 380 பேருக்கு பட்டங்கள் வழங்கப்படுகின்றன. 72 மாணவர்களுக்கு 'மெடல்' வழங்கப்படுகின்றன. பல்கலைக்கு உட்பட்ட பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 30 ஆயிரம் மாணவர்கள் இளநிலை, முதுகலை பட்டங்கள் பெறவுள்ளனர். ஏற்பாடுகளை பதிவாளர் ராஜசேகர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் விஜயன் செய்து வருகின்றனர். விழாவையொட்டி, சிறப்பு சிண்டிகேட் கூட்டம் அக்.,18 ல் நடக்கிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement