Ad Code

Responsive Advertisement

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று சிறப்பு முகாம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (அக்.26) நடைபெறுகிறது.

இந்த முகாம் 28 ஆயிரம் மையங்களில் நடைபெறும் எனவும், பெரும்பாலும் பள்ளிகளில் உள்ள வாக்குச் சாவடிகளிலேயே அவை அமைக்கப்பட்டிருக்கும் என்றும் தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிகள் கடந்த 15-ஆம் தேதி தொடங்கின. நவம்பர் 10-ஆம் தேதி இந்தப் பணிகள் நிறைவடைகின்றன.

இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு, நீக்கல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெறும்.

சிறப்பு முகாம்களில் வாக்குச்சாவடி அலுவலர்கள் உள்ளிட்டோர் இருப்பர். பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்டவற்றுக்கான விண்ணப்பப்படிவங்கள் சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்களில் வழங்கப்படும். அந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அங்கேயே அளிக்கலாம்.

எதற்கு எந்த விண்ணப்பம்? வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க படிவம் 6-ம், வெளிநாட்டில் வசிக்கும் ஒருவரின் பெயரைச் சேர்க்க படிவம் 6ஏ-ம், பெயரை நீக்க படிவம் 7-ம், பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள விவரங்களைத் திருத்த படிவம் 8-ம், பட்டியலில் பதிவு இடம் மாற்றம் செய்வதற்காக படிவம் 8ஏ-ம், மாற்று வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கு படிவம் 001-ஐயும் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.

இணையதள முகவரி: இணையதளம் வழியாகவும் வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்கலாம். இதற்கான இணையதள முகவரி www.elections.tn.gov.in/eregistraion

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement