Ad Code

Responsive Advertisement

பதவி உயர்வு உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு அக்.25 ல் கலந்தாய்வு

 ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் உதவி தொடக்க கல்வி அலுவலராக பதவி உயர்வு பெறுவதற்குரிய முன்னுரிமை பட்டியல், கடந்த ஜூலையில் வெளியிடப்பட்டது. 2008 ம் ஆண்டு, டிச., 31யை தகுதி நாளாக கொண்டு இப்பட்டியலில் 195 பேர் இடம் பெற்றனர். இதில், ஒன்று முதல் 30 வரை உள்ள தலைமை ஆசிரியர்களுக்கு ஏற்கனவே உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலராக பணி மாறுதல் வழங்கப்பட்டது.
மீதம் உள்ளோருக்கு எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், தற்போது முன்னுரிமை பட்டியலில் 31 முதல் 160 முடிய உள்ள தகுதி வாய்ந்த நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, பணி மாறுதல் மூலம், உதவி தொடக்க கல்வி அலுவலர், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலராக பணி மாறுதல் வழங்கப்பட உள்ளது. கலந்தாய்வு, அக்.,25ல், சென்னை தொடக்க கல்வி இயக்க கூட்டரங்கில், காலை 10க்கு நடக்கிறது, என தொடக்க கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

CLICK HERE - DEE - MIDDLE SCHOOL HMs TO AEEO COUNSELING TO BE HELD ON 25.10.2014 AT DEE, CHENNAI - SENIORITY LIST S.NO.31 TO 160 WILL BE PARTICIPATE IN COUNSELING REG PROC

CLICK HERE - DEE - MIDDLE SCHOOL HM TO AEEO SENIORITY LIST S.NO.31 TO 160 RELEASED REG LIST

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement