Ad Code

Responsive Advertisement

தனியார் பள்ளி ஆசிரியர்கள் கலக்கம் -2015 க்குள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறனும் -மெட்ரிக் கல்வித்துறை உத்தரவால் புது சிக்கல்

2015 க்குள் டெட் கிளியர் செய்தவர்களே தனியார் பள்ளியில் பணிபுரிய வேண்டும் என்ற மெட்ரிக் கல்வித்துறை உத்தரவை பற்றி தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் நந்தகுமார் கூறியதாவது:-
சட்டப்படி அடுத்த ஆண்டில் தேர்வு எழுத வேண்டும். ஆனால் இப்போது 3
தேர்வுகள் மட்டுமே நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்குள் 5 தேர்வை வாரியம் நடத்தி இருக்க வேண்டும். அடுத்த தேர்வு எப்போது என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனவே தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு தேர்வு கால கெடுவை நீட்டிக்க வேண்டும்.

மேலும், தேர்வில் தேர்ச்சி பெறுபவர் அரசு பள்ளிக்கு வேலைக்கு செல்கின்றனர். இதனால் ஏற்கனவே ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. இப்போது தகுதித் தேர்வு கெடுவால் மேலும் பலர் வேலை இழப்பர்.
எனவே தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மாற்று ஏற்பாட்டை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement