Ad Code

Responsive Advertisement

10ம் வகுப்பு பொதுத்தேர்வு தனித்தேர்வர் விண்ணப்பிக்கலாம்.

அடுத்த ஆண்டு நடக்கும், 10ம் வகுப்பு பொதுத்தேர்விற்கு தகுதியான தனித்தேர்வர்கள், அக்., 29 முதல் நவ., 7ம் தேதி வரை, கல்வி மாவட்ட, தேர்வுத்துறை சேவை மையங்களில், ஆன் - லைனில் பதிவு செய்யவேண்டும் என, அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 

இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: செப்டம்பர், அக்டோபரில் நடந்த, 10ம் வகுப்பு துணைத் தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள், மதிப்பெண் சான்றுகளை, நாளை 25ம் தேதி, அவர்கள் தேர்வு எழுதிய மையங்களில் நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம்; முடிவுகள், இணையதளத்தில் வெளியிடப்பட மாட்டாது. மறுக்கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள், அரசு தேர்வுத்துறை சேவை மையங்களில், அக்., 27 முதல் 29ம் தேதி வரை நேரில் சென்று, ஆன்-லைனில் பதிவு செய்ய வேண்டும். மறு கூட்டலுக்கு, இரு தாள் கொண்ட பாடத்திற்கு, 305 ரூபாய், ஒரு தாள் பாடத்திற்கு, 205 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். அடுத்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரலில் நடக்கும், 10வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள், அக்., 29 முதல் நவ., 7ம் தேதி வரை, கல்வி மாவட்ட வாரியாக உள்ள அரசுத் தேர்வுத்துறை சேவை மையங்களுக்கு நேரில் சென்று, விண்ணப்பங்களை ஆன் - லைனில் பதிவு செய்ய வேண்டும். இந்த தேர்வு சார்ந்த மேலும் விவரங்களை, www.tndge.in என்ற இணையதளத்தில் காணலாம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement