Ad Code

Responsive Advertisement

ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறையை எதிர்த்து தொடர்ப்பட்ட வழக்குகள் தள்ளுபடி - DETAILED NEWS

ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறையை எதிர்த்து தொடர்ப்பட்ட வழக்குகளை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது. தகுதித்தேர்வு மூலம் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொண்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெறும் மதிப்பெண்ணுடன் அவர்கள் பிளஸ்-2, பட்டப்படிப்பு, பி.எட், ஆசிரியர் பயிற்சி படிப்பு போன்றவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தற்போது பணி நியமனம் நடைபெறுகிறது.
இந்த வெயிட்டேஜ் முறைக்கு ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வெயிட்டேஜ் முறையில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில் வெயிட்டேஜ் முறை, 5 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கு விசாரணையின் போது சென்னை ஐகோர்ட்டு, ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறையை எதிர்த்து தொடர்ப்பட்ட வழக்குகள் அனைத்தையும்  தள்ளுபடி செய்தது. 45- க்கும் மேற்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்யப்பட்டது. நிபந்தனைகளை ஏற்று தகுதித்தேர்வு எழுதிவிட்டு தற்போது எதிர்ப்பதை ஏற்க முடியாது என்று ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது. சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பின் மூலம் ஆசிரியர் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீங்குகிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement