Ad Code

Responsive Advertisement

CTET - மத்திய அரசு பள்ளி ஆசிரியர் தகுதித்தேர்வு செப்.21-ம் தேதி நடக்கிறது

மத்திய அரசு பள்ளிகளில் ஆரம்ப நிலை மற்றும் உயர்நிலை வகுப்பு ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு செப்டம்பர் 21-ம் தேதி நடக்கிறது. மதுரையில் 4 மையங்களில் நடைபெறவுள்ள இத்தேர்வெழுத 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

மத்திய அரசு பள்ளிகளான கேந்திர வித்யாலயா, நவோதயா, சைனிக் உள்ளிட்ட பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றுவதற்கான தகுதித்தேர்வு செப்டம்பர் 21-ம் தேதி நடக்கிறது.

மதுரையில், நரிமேடு கேந்திர வித்யாலயா பள்ளி, திருப்பரங்குன்றம் கேந்திர வித்யாலயா பள்ளி, நாராயணபுரம் எஸ்இவி மேல்நிலைப்பள்ளி, நாகமலைப் புதுக்கோட்டை வெள்ளைச்சாமி நாடார் பள்ளி ஆகிய 4 மையங்களில் இத்தேர்வு நடக்கிறது. ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களுக்கு காலை 8.30 மணி முதல் 11 மணி வரையிலும், 6,7,8,9-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும் 2 கட்டங்களாக தேர்வு நடக்கிறது.

இத்தேர்வை எழுத 4 மையங்களிலும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர். இத்தேர்வு மையங்களின் ஒருங்கிணைப்பாளர் நரிமேடு கேந்திர வித்யாலயா பள்ளி முதல்வர் முத்தையா தலைமையில் தேர்வு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வு மையங்களை ஒருங்கிணைப்பாளர் மற்றும் புதுதில்லி, சென்னையிலிருந்து வரும் மேற்பார்வையாளர்களும் கண்காணிக்க உள்ளனர்.

இத்தேர்வு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் செப்டம்பர் 20-ம் தேதி இன்று காலை 10 மணிக்கு நரிமேடு கேந்திர வித்யாலயா பள்ளி முதல்வரும் ஒருங்கிணைப்பாளருமான முத்தையா தலைமையில் நடக்கிறது. இத்தேர்வு மையங்களின் பள்ளி முதல்வர்கள் மற்றும் தேர்வு மையங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் பங்கேற்கவுள்ளனர்.

ஆசிரியர்களுக்கு வேண்டுகோள்: இத்தேர்வை எழுத தமிழகத்திலுள்ள ஆசிரியர்கள் பெரும்பாலும் தயங்குவதாக, கேந்திர வித்யாலயா பள்ளி மூத்த ஆசிரியர் ஒருவர் வேதனை தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், இத்தேர்வு மிகவும் எளிதாக இருக்கும். தமிழகத்திலுள்ள பெரும்பாலான ஆசிரியர்கள் தேர்வை எதிர்கொள்வதற்கு தயங்குகின்றனர். தேர்வுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் பெரும்பாலும் தேர்வை எழுதாமல் விடும் நிலை நீடிக்கிறது.

இது தவறான கண்ணோட்டம். இத்தேர்வை நம்பிக்கையுடன் தமிழக ஆசிரியர்கள் எதிர்கொண்டால், எளிதாக தகுதி பெறலாம். தேர்வில் வெற்றி பெற்றால் மத்திய அரசு பள்ளிகளில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். அத்துடன் வெளிநாடுகளில் சென்று பணியாற்றவும் வாய்ப்பு கிடைக்கும். எனவே, தமிழகத்தில் இத்தேர்வை நம்பிக்கையுடன் தமிழக ஆசிரியர்கள் எதிர்கொளள வேண்டும், என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement