Ad Code

Responsive Advertisement

பகுதிநேர சிறப்பாசிரியர்களின் ஊதிய உயர்வு மற்றும் மாற்றுப்பணி நிலவரம்...





 தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர் சங்கம் தமிழக அரசுக்கு அனைத்து வகையிலும் ஆதரவாக செயற்படுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.



1. இலங்கை அதிபர் ராஜபக்சேயை கண்டித்து வேறு எந்த இயக்கங்களும் மேற்கொள்ளாத வகையில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டது.


  2. கோவை மாநகராட்சி மேயர் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க.விற்கு முக்கிய அமைச்சர்கள் முன்னிலையில் தமிழக பகுதிநேர சிறப்பு ஆசிரியர் சங்கத்தின் சார்பாக ஆதரவுக் கடிதம் அளிக்கப்பட்டது. 

   தேர்தலில் வெற்றி வாய்ப்பைப் பெற்றிட பகுதிநேர ஆசிரியர்களாகிய நாம் நமது குடும்பத்துடன் முழு ஒத்துழைப்பையும் தரத் தயாராக உள்ளோம் என்று பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சார்பில் தெரிவித்துள்ளோம்.

   ஆதரவுக் கடிதம் அளித்தபின், மாற்றுப்பணிக்காக விண்ணப்பித்தவர்களின் பட்டியல் கொடுக்கப் பட்டுள்ளது. ஊதிய உயர்வு குறித்தும் நினைவூட்டப் பட்டது. 

முக்கிய அமைச்சர்கள் தரப்பில் பெறப்பட்ட பதில்கள் :


  
 ஊதிய உயர்வுக்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், விண்ணப்பித்தவர்களுக்கு மாற்றுப் பணிக்கு ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தனர். மேலும், இதுபற்றி உடன் முதல்வரின் பார்வைக்குக் கொண்டு செல்வதாகவும் தெரிவித்தனர்.




 தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாலும், இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமன போராட்டம், வழக்குகள் போன்றவற்றாலும் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றும் கருத்துத் தெரிவிக்கப் பட்டது.

   இருப்பினும், இம்மாதத்திற்குள் அனைத்தும் முடிக்கப்பட்டு அடுத்த மாதத்தில் ஊதிய உயர்வை எதிர்பார்க்கலாம் என்றும் கூறினர்.

பொன். சங்கர்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement