தந்தை உயிரிழந்தபோது சிறுவனாக இருந்தவருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அழகேசன் என்பவரின் தந்தை வருவாய்த் துறையில் ஊழியராகப் பணியாற்றினார். கடந்த 2001-ம் ஆண்டு அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அப்போது அழகேசன் சிறுவனாக இருந்தார். அந்த நேரத்தில் அழகேசனின் தாயார் தனக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கக் கோரி விண்ணப்பம் அளித்தார். எனினும் அவருக்கு வேலை வழங்கப்படவில்லை.
இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை ஏற்றுக் கொண்ட தனி நீதிபதி, அவருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்குமாறு கடந்த ஆண்டு உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து அரசுத் தரப்பில் மேல் முறையீடு செய்யப் பட்டது. மனுதாரரின் தந்தை உயிரிழந்தபோது அவர் சிறுவனாக இருந்தார். வேலை வேண்டி விண்ணப்பித்த அவரது தாயார் தேவையான ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை. மேலும், தனக்குப் பதிலாக மகனுக்கு வேலை வழங்குமாறு கோரி மனுதாரரின் தாயார் கூறவில்லை. ஆகவே, அவருக்கு பணி வழங்குமாறு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும் என அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அரசுத் தரப்பு வாதத்தை ஏற்க மறுத்து விட்டனர். மனுதாரரின் தந்தை உயிரிழந்தவுடன் அவரது தாயார் வேலை கோரி விண்ணப்பித்தார். அவரது விண்ணப்பம் அப்படியே நிலுவையில் இருந்தது. இந்நிலையில் தாயாருக்குப் பதில் தனக்கு வேலை தர வேண்டும் என கோரி மகன் விண்ணப்பித்தார். தனக்குதான் வேலை வேண்டும் என தாயார் வற்புறுத்தவில்லை. மகனுக்கு வேலை வழங்குவதை அவர் விரும்புகிறார். இந்நிலையில் தாயாரின் விண்ணப்பத்தை காரணம் காட்டி மகனுக்கு வேலை தர மறுக்க இயலாது. கருணை அடிப்படையில் வேலை என்பது உயிரிழந்த அரசு ஊழியரின் ஒட்டுமொத்த குடும் பத்தை பாதுகாக்கதானே தவிர, அந்தக் குடும்பத்தில் உள்ள ஒரு உறுப்பினருக்காக மட்டும் அல்ல. ஆகவே, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு சரியானதே. அரசின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை