Ad Code

Responsive Advertisement

கல்வி துறைக்கு தேர்வான தட்டச்சர்கள் நாளை நியமனம்

பள்ளி கல்வித் துறைக்கு தேர்வான 213 தட்டச்சர்கள், நாளை, 'ஆன் - லைன்' வழியில் நடக்கும் கலந்தாய்வில், பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் அறிவிப்பு:டி.என்.பி.எஸ்.சி., மூலம் 213 தட்டச்சர்கள், பள்ளி கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை பணி நியமனம் செய்வதற்கான, 'ஆன் - லைன்' கலந்தாய்வு, 20ம் தேதி (நாளை), மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் நடக்கிறது.வேலைக்கு தேர்வு பெற்றவர்கள், தங்கள் முகவரி சார்ந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்குச் சென்று, கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும்.கலந்தாய்வுக்கு, ஒரு மணி நேரம், முன்னதாக வர வேண்டும். டி.என்.பி.எஸ்.சி., வழங்கிய துறை ஒதுக்கீட்டு உத்தரவு கடிதம், கல்விச் சான்றிதழ்கள், ஜாதிச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை, தவறாமல் கொண்டு வர வேண்டும்.இவ்வாறு, இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement