Ad Code

Responsive Advertisement

ஆசிரியர் தாக்கியதால் பள்ளி மாணவி விஷம் குடித்தார்

விருதுநகர் அருகே சத்திரரெட்டியபட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 500- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். சமீபத்தில் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதத் தேர்வு நடத்தப்பட்டது. அதில் வேதியியல் பிரிவில் சில மாணவிகள் குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். வேதியியல் பிரிவு ஆசிரியை ஷர்மிளா, குறைவான மதிப்பெண்கள் பெற்ற முத்துகாமாட்சி உட்பட 5 மாணவிகளை, மற்ற மாணவிகள் முன்னிலையில் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் மனமுடைந்த மாணவி முத்துகாமாட்சி, வீட்டிற்கு சென்றதும் விஷம்குடித்துள்ளார்.அருகில் உள்ளவர்களுக்கு தகவல்தெரிந்து, மாணவியை விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் தினேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தனியார் பள்ளிகளைப் போல் தற்போது அரசுப் பள்ளிகளிலும் மாணவர்கள் மீது தாக்குதல் அதிகரித்துள்ளது. குறைவான மதிப்பெண்கள் பெற்றனர் என்ற காரணத்திற்காக மாணவிகளை, ஆசிரியை ஷர்மிளா கடுமையாக தாக்கிய சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். மேலும் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது மாவட்ட கல்வித்துறை உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மறுக்கும் பட்சத்தில் மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement