Ad Code

Responsive Advertisement

பின்வாங்கியது மத்திய அரசு - 'குரு உத்சவ்' என்பது கட்டுரைப் போட்டி: மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி விளக்கம்

ஆசிரியர் தினம் என்பதை இனி 'குரு உத்சவ்' என்றுதான் அழைக்க வேண்டும் மத்திய அரசு ஆணை வெளியிட்டுள்ளதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், 'குரு உத்சவ்' என்பது கட்டுரைப் போட்டிக்கு வைக்கப்பட்டுள்ள தலைப்பு மட்டுமே என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி விளக்கமளித்துள்ளார்.

அவர் கூறியதாவது: 'குரு உத்சவ்' ஆசிரியர்களைக் கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் நடத்தப்படவுள்ள கட்டுரைப் போட்டிக்கான தலைப்பு. இதற்குக் கூட அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன என்றால் எனக்கு அது வேதனை அளிக்கிறது. அதேபோல், ஆசிரியர் தினத்தன்று பிரதமர் மோடி தொலைக்காட்சியில் ஆற்றும் உரையை பள்ளி மாணவர்கள் கட்டாயம் பள்ளியில் இருந்து காண வேண்டும் என எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. தேவையில்லாமல் அரசியல் கட்சிகள் திரித்துக் கூறுகின்றன என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement