மாநில அளவில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 'பணிநிரவல்' மாறுதல் கலந்தாய்வு ஜூன் 26ல்
நடந்தது. அப்போது மாநிலம் முழுவதும் கணக்கெடுக்கப்பட்ட உபரி(சர்பிளஸ்) ஆசிரியர்களை 'பணி நிரவல்' அடிப்படையில் வேறு மாவட்டங்களுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் உபரி ஆசிரியர் எண்ணிக்கையை கணக்கிட்டு, மாவட்டம் தோறும் கூடுதல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன.இக்கூடுதல் இடங்களில் 400க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மாநிலம் முழுவதும் நியமிக்கப்பட்டனர். மதுரையில் 29 ஆசிரியர்களுக்கு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டன. இவர்கள் பணியில் சேர்ந்த பின், நிதித்துறை ஒப்புதல் கிடைக்காததால், ஜூலை, ஆகஸ்ட் மாத சம்பளம் கிடைக்கவில்லை.
இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இந்நிலையில், கூடுதல் பணியிடங்களில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு இரண்டு நாட்களாக அடுத்தடுத்து சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கல்வித் துறையின் இந்த நடவடிக்கைக்கு, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்கம் மற்றும் ஆசிரியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை