Ad Code

Responsive Advertisement

பட்டதாரி ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி

புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு, புத்தாக்க பயிற்சியளிக்க, கல்வித் துறை முடிவு செய்துள்ளது. புதிய பட்டதாரி ஆசிரியர்கள், கவுன்சிலிங் முடிந்து, நியமன உத்தரவு பெற்றதும், உரிய அரசு பள்ளிகளில் பணியில் சேர வேண்டும் என, கல்வித் துறை தெரிவித்துள்ளது. அதை தொடர்ந்து, ஆசிரியர்களுக்கு, இடைநிலை கல்வித்திட்டம் மூலம், புத்தாக்க பயிற்சியளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என, பாடவாரியாக மூத்த ஆசிரியர்களைக் கொண்டு, பயிற்சியளிக்கப்படும். இதில், மாணவர்களுடனான உறவு, எளிதில் புரியம்படி வகுப்பில் பாடம் நடத்துவது போன்றவை கற்றுத்தரப்படும்' என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement