Ad Code

Responsive Advertisement

ஆராய்ச்சி விருதுக்கு விண்ணப்பிக்க கல்லூரி ஆசிரியர் தயங்குவது ஏன்?

பல்கலை மானியக்குழு (யு.ஜி.சி.,) சார்பில் பல்கலை, கல்லூரி ஆசிரியர்களுக்கு 'ஆராய்ச்சி விருது' வழங்கப்படுகிறது. இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை, தேசிய அளவில் நூறு பேர் விருதுக்கு தேர்வு செய்யப்படுகின்றனர்.தேர்வாகும் ஆசிரியர்கள் மாநில அரசிடம் இருந்து விடுவிக்கப்பட்டு இரு ஆண்டுகள் ஆராய்ச்சியில் ஈடுபடுவர். அவர்கள் தங்கள் கல்லூரி அல்லது பல்கலை என எங்கு வேண்டுமானாலும் ஆராய்ச்சியில் ஈடுபடுவர். இதற்காக அவர்களுக்கு கலைப்பிரிவு ஆசிரியர் எனில் ரூ. 2 லட்சம், அறிவியல் ஆசிரியர் எனில் ரூ.3 லட்சம் மற்றும் இரு ஆண்டுகளுக்கான முழுச்சம்பளம், சம்பள உயர்வு வழங்கப்படும்.

2012-14 ம் ஆண்டுக்கான ஆராய்ச்சி விருதுக்கு 100 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் 22 பேர் தமிழகத்தவர். இவர்களுக்கு மாற்றுப் பணி என வழங்கி ஆய்வுக்கு அனுப்ப வேண்டும். இதில் பலர் இவ்விதம் அனுப்பப்படவில்லை. அவர்களுக்கு ஊதியமில்லா விடுப்பு வழங்கப்பட்டதுடன், விடுப்பு காலத்திற்கான சம்பளத்தை அரசுக்கு செலுத்த வேண்டும் என கூறப்பட்டது.அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பெரும்பாலும் ஆசிரியர்களை விடுவிப்பதில்லை. கல்லூரிக்கு பெருமை எனக் கருதும் நிர்வாகங்களே ஆசிரியர்களை அனுப்ப முன்வருகின்றன. அதேபோல அரசு கல்லூரிகளை பொறுத்தவரை, முன்பு இயக்குனர் அளவில் அனுமதி பெற்று விடுவிக்கப்பட்டனர். தற்போது உயர்கல்வித்துறை மற்றும் நிதித்துறை செயலர் அளவில் ஒப்புதல் பெற வேண்டும் என்பதால், தாமதம் ஆவதும், தள்ளிப் போவதும் தவிர்க்க முடியாததாகிவிட்டது.இந்நிலையில் 2014-16ம் ஆண்டுக்கு ஆராய்ச்சி விருதுக்கு விண்ணப்பிக்க, வெப்சைட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுபோன்ற இடையூறுகளால் விருதுக்கு விண்ணப்பிக்க கல்லூரி ஆசிரியர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.கல்லூரி ஆசிரியர்கள் கூறுகையில், 'விடுவிக்கப்படும் ஆசிரியர்கள் இடத்தில் பதிலி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இதனால் மாநில அரசுக்கு நிதியிழப்பு ஏற்படாது. பதிலி ஆசிரியர்கள் நியமித்தால் சில தனியார் கல்லூரிகள் தங்கள் ஆசிரியர்களை விடுவிக்க வாய்ப்புள்ளது,' என்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement