Ad Code

Responsive Advertisement

திருவண்ணாமலை இடைநிலை ஆசிரியர்கள் 62 பேருக்கு பணி நியமனஒதுக்கீட்டு ஆணை

திருவண்ணாமலை இடைநிலை ஆசிரியர்கள் 62 பேருக்கு பணி நியமனஒதுக்கீட்டு ஆணை திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்கள் 62பேருக்கு திங்கள்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில், பணி நியமனஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டன. தொடக்கக் கல்வி இயக்ககத்துக்கென ஏற்கெனவே ஆசிரியர்தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கானபணி நியமன கலந்தாய்வு திங்கள்கிழமை நடைபெற்றது. 

திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வுக்கு மாவட்டத்தைச் சேர்ந்த 67பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டு இருந்தது. இதில், 62 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். 5 பேர்கலந்து கொள்ளவில்லை. கலந்து கொண்ட 62 பேரும்திருவண்ணாமலை மாவட்ட அரசுப் பள்ளிகளில் காலியாக இருந்தஇடங்களை தேர்வு செய்தனர். இதையடுத்து, 62 பேருக்கும் பணி நியமனஒதுக்கீட்டு ஆணைகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் 
பொ.பொன்னையா வழங்கினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement