Ad Code

Responsive Advertisement

பிளஸ்2 காலாண்டுத்தேர்வு பாடத்தில் இல்லாத கேள்விகளால் மாணவர்கள் திணறல்

பிளஸ்2 கணித தேர்வில் பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகளால் மாணவர்கள் திண்டாடினர். தமிழகம¢ முழுவதும் பிளஸ்2 வகுப்பிற்கு காலாண்டுத் தேர்வு கடந்த 15ம் தேதி தொடங்கியது. நேற்று காலை பிளஸ்2 கணிதம் தேர்வு நடந்தது. காலை 9.45 மணிக்கு தேர்வு தொடங்கியதும் மாணவ, மாணவிகளுக்கு வினாத்தாள்கள் வழங்கப்பட்டன.
வினாத¢தாள்களை வாசித்துப் பார்த்த மாணவ, மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதாவது, காலாண்டுத் தேர்வுக்கு பிளஸ்2 வகுப்பில் கணிதத்தில் முதல் பாடத்தில் இருந்து  5 பாடங்கள் வரை சேர்க்கப்பட்டிருந்தன. ஆனால் காலாண்டுத் தேர்வு பாடத்திட்டத்தில் இல்லாத 6வது பாடமான ‘நுண் கணிதம் - பயன்பாடுகள் இரண்டு‘ என்ற பாடத்தில் இருந்து 10 மதிப்பெண் கேள்விகள் இரண்டும், 6 மதிப்பெண் கேள்விகள் இரண்டும், 4 மதிப்பெண் கேள்விகள் ஒன்று என 36 மதிப்பெண்களுக்கு கேள்விகள் இடம் பெற்றன. 

இந்த கேள்விகளுக்கு பதில் தெரிவிக்க முடியாமல் மாணவ, மாணவிகள் திணறினர். மாணவ, மாணவிகளின் அறிவுத் திறன், புரிதல் ஆகியவற்றை ஆய்வு செய்வதற்காக தான் மாதம் தோறும் தேர்வு, காலாண்டுத் தேர்வு, அரையாண்டுத் தேர்வு ஆகியவை நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வுகளில் பாடத் திட்டம் அல்லாத பகுதிகளில் இருந்து கேள்வி எழுப்பினால் மாணவர்களை எப்படி மீளாய்வு செய்ய முடியும் என தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக சங்கத்தினர் கூறுகையில், இதுபோன்ற குளறுபடிகளால் மாணவர்கள் மத்தியில் வீண் குழப்பம் உருவாகும். நன்றாக படிக்கும் மாணவர்கள் கூட மதிப்பெண் குறையும். தேர்வுக்கான வினாக்கள் தயாரிக்கும் போது தேர்வுத்துறை கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement