Ad Code

Responsive Advertisement

TNPSC - வன பயிற்சிக்கான நேர்முகத்தேர்வு பட்டியல் : ரத்து செய்தது செல்லாது என ஐகோர்ட் உத்தரவு

'வனத்துறை பயிற்சிக்காக, நேர்முகத் தேர்வுக்கு தேர் வானவர்களின் பட்டியலை ரத்து செய்தது செல்லாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

வனத் துறையில், 'அப்ரன்டீஸ்' பணிக்கு, 80 காலியிடங்களுக்கு, 2011, பிப்., மார்ச்சில், எழுத்துத் தேர்வு நடந்தது. அதில், 3,642 பேர், தேர்வு எழுதினர். உடல்கூறு தேர்வுக்குப் பின், 170 பேர், நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். இவர்களில், 169 பேர், 2012, ஆகஸ்ட்டில் நடந்த
நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டனர். இந்த தேர்வை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டது. அதில், கூறியிருப்பதாவது: எழுத்து தேர்வில் வெற்றி பெற்றும், நேர்முகத் தேர்வுக்கு, எங்களை அழைக்கவில்லை. நாங்கள் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளாமல் இருக்கும் வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணை யம், ஒரு விகிதாச்சாரத்தை பின்பற்றியது. நாங்கள், வனம் தொடர்பான பட்டம் பெறவில்லை என்றாலும், வனத்தை ஒரு பாடமாக கொண்டு படித்துள்ளோம். எனவே, வனத் துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதில், எந்த காரணமும் இல்லை. இவ்வாறு, மனுவில் கூறப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த தனி நீதிபதி, பணியாளர்கள் தேர்வாணையம் வெளியிட்ட, நேர்முகத் தேர்வுக்கான பட்டியலை ரத்து செய்தது. இதை எதிர்த்து, அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில், அப்பீல் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. தேர்வாணையம் சார்பில், மூத்த வழக்கறிஞர் முத்துகுமாரசாமி, வழக்கறிஞர் நந்தகுமார், வனத் துறை சார்பில், அட்வகேட் ஜெனரல் சோமயாஜி, சிறப்பு அரசு பிளீடர் எம்.கே.சுப்ரமணியன் ஆஜராகினர். வழக்கை விசாரித்த, நீதி பதிகள் என்.பால்வசந்தகுமார், சத்தியநாராயணன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, அறிவிக்கப்பட்ட தேர்வு நடைமுறை தெரிந்த பின், அந்த தேர்வில் பங்கு கொண்டவர், அதை எதிர்த்து கேள்வி கேட்க உரிமை இல்லை. நேர்முகத் தேர்வுக்கு, வனத் துறையில் பட்டம் பெற்ற, 87 பேர், அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 86 பேர், நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்களை கணக்கில் கொள்ளும் போது, வனத் துறை பட்டம் பெறாத மற்றவர்களுக்கு, எந்த இடமும் இருக்காது. அதுவும், இட ஒதுக்கீட்டின் கீழ், சில இடங்கள் மட்டுமே வருகிறது. தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில், வனத் துறை பட்டம் பெற்றவர்களுக்கு, முதலில் முன்னுரிமை வழங்கப்படும் என, கூறப்பட்டு உள்ளது. தேர்வாணைய வழக்கறிஞரின் வாதத்தில் இருந்து, வனத்துறை பட்டம் பெற்றவர்கள் போதிய அளவுக்கும் அதிகமாக இருக்கும் போது, மற்றவர்களை பரிசீலிக்க முடியாது என்பது தெரிகிறது. வனத்துறை, சிறப்பு விதிகளில் கொண்டு வந்த திருத்தத்தின் படி, வனத்துறை பட்டம் பெறாதவர்களையும் பரிசீலிக்க முடியும் என, தனி தேர்வர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க முடியாது. ஏனென்றால், திருத்தம், கடந்த மாதம் தான், அமலுக்கு வந்துள்ளது. ஆனால், காலியிடங்களுக்கான அறிவிப்பாணை, 2010, நவம்பரில் வெளியிடப்பட்டு விட்டது. திருத்த விதிகளை, முன் தேதியிட்டு அமல்படுத்த முடியாது. வனத்துறை பட்டம், ஆங்கில வாயிலாக பயிற்றுவிக்கப் படுகிறது. போதிய எண்ணிக்கையில் இவர்கள் இருக்கும் போது, தமிழ் மொழியில் படித்த, வனத்துறை பட்டம் பெறாதவர்களை, இதில் நியமிக்க முடியாது. இவ்வாறு, 'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement