Ad Code

Responsive Advertisement

மதுரையில் எட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது

இணை இயக்குனர் (மேல்நிலை பள்ளி) பாலமுருகன்தலைமை வகித்தார். மதுரை முதன்மை கல்வி அலுவலர்ஆஞ்சலோ இருதயசாமி முன்னிலை வகித்தார். சி.இ.ஓ.,க்கள் வாசு (தேனி),ஜெயகண்ணு (ராமநாதபுரம்), செந்திவேல்முருகன் (சிவகங்கை), ஜெயக்குமார் (விருதுநகர்),கஸ்தூரிபாய் (நெல்லை), முனுசாமி (தூத்துக்குடி), ராதா கிருஷ்ணன் (கன்னியாகுமரி) பங்கேற்றனர். வரும் கல்வியாண்டு முதல் தமிழ் பாடம் கட்டாயம் என்பதால் சிறுபான்மையினர் பிரிவு உள்ளிட்டஅனைத்து வகை பள்ளிகளிலும் தமிழ் பாடம் கற்பிக்கப்படுகிறதா, மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகள்ஏற்படுத்தப்பட்டுள்ளதா என சி.இ.ஓ.,க்கள் கண்காணிக்க வேண்டும். 

அரசு நடுநிலை பள்ளிகளில் மாணவர்களின் தமிழ், ஆங்கிலம் வாசிப்பு மற்றும் எழுதும் திறன்,அடிப்படை கணித அறிவை மேம்படுத்துவதற்கு ஆசிரியர்கள் சிறப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும், பத்தாம்வகுப்பு மற்றும் பிளஸ் 2வில் தேர்ச்சி சதவிகிதத்தை அதிகரிக்க வேண்டும். அரசு திட்டங்கள் மாணவர்களுக்கு முழுமையாக சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும், எனஇணை இயக்குனர் அறிவுறுத்தினார். 

பிளஸ் 2 தேர்ச்சியில் 28 ஆண்டுகளாக மாநில அளவில் விருதுநகர் மாவட்டம் 
முன்னணியில் இருந்தது. இந்தாண்டு மூன்றாம் இடத்திற்கு சென்றது விவாதத்தை ஏற்படுத்தியது. வரும்கல்வியாண்டில், மீண்டும் முதல் இடத்தை பெற 
கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், எனவும் அறிவுறுத்தப்பட்டது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement