அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த, வரும் செப்., 30 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 16 விதமான இலவச திட்டங்கள் செயல் படுத்தினாலும் கூட, அரசு பள்ளிகள் மீதான நம்பிக்கை பெற்றோருக்கு இல்லாத காரணத்தால், மாணவர் சேர்க்கை அதிகரிக்கவில்லை. எனவே, அரசு பள்ளிகளில் பின்பற்றப்படும் நடைமுறைகளில் மாற்றங்களை கொண்டு வர வேண்டுமென ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கோடை விடுமுறைக்குபின், ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. உடனடியாக, பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. கடந்தாண்டு வரை, ஜூலை 31 வரை மட்டுமே மாணவர் சேர்க்கைக்கு பள்ளி கல்வித்துறை அவகாசம் வழங்கியது. அதன்பின், பணி மாறுதல் மற்றும் குடிபெயர்தல் காரணமாக சில மாணவ, மாணவியர் பள்ளியில் சேர வரும் பட்சத்தில், கல்வி நலன் கருதி, அவர்களை பள்ளியில் சேர்த்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது. நடப்பு கல்வியாண்டில், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, மாணவர் சேர்க்கைக்கு செப்., 30 வரை கூடுதலாக இரண்டு மாதம் அவகாசத்தை நீட்டித்து, பள்ளி கல்வித்துறை உ<த்தர விட்டுள்ளது. முதன்மை கல்வி அலுவலர்கள், இதுகுறித்து அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவித்து, மாணவர் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
இலவச பாடப்புத்தகம், நோட்டு புத்தகம், சைக்கிள், பஸ் பாஸ் என 16 வகையான கல்வி நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்துகிறது. இதற்காக, ஆண்டுக்கு 17 ஆயிரம் கோடி ரூபாய் வரை, நிதிஒதுக்கப்படுகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை முழுமையான இலவச கல்வி அளித்தும், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் குறைவதும், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரிப்பதோடு, புதிதாக தனியார் பள்ளிகள் உருவாவதும், பள்ளி கல்வித்துறைக்கு நெருக்கடியை ஏற்படுத்திஉள்ளது. அரசு பள்ளிகளில் கிடைக்கும் கல்வி சலுகைகளுக்காக சில பெற்றோர்களே, தனியார் பள்ளியில் படிக்கும் தங்களது குழந்தைகளை, அரசு பள்ளியில் சேர்க்கின்றனர். ஏழ்மை காரணமாக, ஒரு தரப்பினர் அவ்வாறு செய்கின்றனர். மற்றபடி, தனியார் பள்ளிகள் மீதுள்ள அபிப்ராயத்தில், பெரிய அளவில் மாற்றம் இருப்பதில்லை. கடந்தாண்டு வரை, இரண்டு மாதம் மட்டுமே மாணவர் சேர்க்கைக்கு அவகாசம் அளிக்கப்பட்டது; நடப்பாண்டில் இரண்டு மாதம் கூடுதல் அவகாசம் தந்திருப்பது, எதிர்பார்த்த அளவில் அரசு பள்ளிகளில் சேர்க்கை நடக்கவில்லை என்பதை
வெளிப்படுத்துவதாக, கல்வி ஆர்வலர்கள் கூறுகின்றனர். பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "தனியார் பள்ளிகளில் கல்வி கற்பிக்க கட்டணம் வசூலித்தாலும், படிப்பிலும், ஒழுக்கத்திலும், பள்ளி நிர்வாகத்திலும் சிறப்பான விதிமுறைகளை பின்பற்றுவது பெற்றோருக்கு திருப்தியளிக்கிறது. கல்வி கற்பித்தல், மாணவர்களை ஒழுங்கு படுத்துதல், பள்ளி நிர்வாகம் போன்ற வற்றில் பெரும்பாலான அரசு பள்ளிகள் இன்னும் பின்தங்கி இருப்பதை மறுக்க முடியாது. பள்ளிகளில் சில மாற்றங்களை ஏற்படுத்தினால் மட்டுமே, அரசு பள்ளி களில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்,' என்றார். அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறும்போது, "துவக்கப்பள்ளிகளை நடுநிலைப்பள்ளியாகவும், நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாகவும், உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாகவும், ஆண்டு தோறும் தரம் உயர்த்துவதால், மாணவர் சேர்க்கை குறைந்தது போன்ற "மாயை' ஏற்படுகிறது. மற்றபடி, வழக்கம் போலவே மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது,' என்றனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை