Ad Code

Responsive Advertisement

TNTET : போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள ஆசிரியர்களின் கோரிக்கைகள்

2013-ஆசிரியர் தகுதித் தேர்வில் 90- மதிப்பெண் மேல் பெற்றஆசிரியர்கள்  தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு எங்களின் பணிவான வேண்டுகோள்.


*ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுகலை ஆசிரியர் தேர்வினைப்போல் தகுதிதேர்வில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும்.
காரணம்:

Weightage என்பது    +2  மதிப்பெண்ணை = 10 eg(730/1200)=60%x10/100= 6                                                     
B,SC/B.A மதிப்பெண்ணை =15  
B,ED   மதிப்பெண்ணை =15
தகுதிதேர்வு மதிப்பெண்ணை =60
மொத்தம்   =100 என கணக்கிடுவது.


1.தமிழக அரசு மற்றும் மத்திய அரசு நடத்தும் TNPSC,TRB & CTET,UPSC போன்ற தேர்வுகளுக்கு தேர்வில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கப்படுகிறது.

2.+2, B.SC / B.A , B.ED ஆகிய படிப்பானது பத்து வருடத்திற்கு முன்பு எடுத்த மதிப்பெண் மிக குறைவு [மதிப்பிடு முறை] ஆனால் தற்போழுது எடுக்கும் மதிப்பெண் மிக ஆதிகம்,ஓவ்வொருவரும் வெவ்வேறு காலகட்டத்தில் படித்துள்ளனர்.

3.+2 VOCATIONAL பிரிவில் செய்முறை தேர்வில் 440 மதிப்பெண் பெறும் அவர்கள் சராசரியாக தேர்ச்சி பெற்றாலே 900 மதிப்பெண் பெறுகின்றனர்.அவர்களுக்கு இணையாக மற்ற +2 பாட பிரிவு பயின்றவர்களை கருதகூடாது.

4. 10-15 ஆண்டுகளுக்கு மேல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து,பதிவு மூப்பு அடிப்படையில் வேலை கிடைக்கும் தருவாயில்,ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி [90 மதிப்பெண்] பெற்றால் தான் வேலை என்ற அரசின் அறிவிப்பால் அத்தேர்வினையும் எழுதி 90 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றும் வேலை கிடைக்கும் என எதிர்பாப்த்து Weightage காரணமாக வேலை கிடைக்காமல் வாடுகிறோம்.

[அல்லது]

*தேர்வு நடத்துவதற்கு முன் உள்ள விதிமுறைகளே அந்த தேர்வின் முடிவிற்கு பொருந்தும் எனவே 2013 ல் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் 90 மதிப்பெண் மேல் (60 %) பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement