அரசு ஊழியர்களின் சிறப்பான பணியை ஊக்குவிக்கும் விதமாக,
சாதனைக்கான பிரதமர் விருது வழங்கப்படுகிறது. மத்திய, மாநில அரசு பணியில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளின் பணியை ஊக்குவித்து பாராட்டும் விதமாக, மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பில், சாதனைக்கான பிரதமர் விருது வழங்கப்படுகிறது.
மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள், தனியாகவோ, குழுவாகவோ அல்லது நிறுவன அடிப்படையிலோ, இந்த விருதுக்கு தேர்வு செய்யப்படுவர். கடந்த, 2013 14க்கான விருதுக்கு, மத்திய அரசு அமைச்சகங்கள், துறைகள், மாநில அரசுகள். அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் இதர பிரிவினரிடம் இருந்து விண்ணப்பங்களை, நிர்வாக சீர்திருத்தத் துறை வரவேற்றுள்ளது.
விண்ணப்பங்களை, அக்டோபர், 17ம் தேதிக்குள், டில்லி, பார்லிமென்ட் தெரு, சர்தார் படேல் பவன், ஐந்தாவது தளத்தில் உள்ள, நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர் துறையின் இயக்குனருக்கு அனுப்ப வேண்டும். இதற்கான மாதிரி படிவம் மற்றும் திட்டம் குறித்த இதர தகவல்கள், நிர்வாக சீர்திருத்தத் துறையின் இணையதளத்தை பார்த்து அறியலாம்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை