Ad Code

Responsive Advertisement

ஆசிரியர் தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் பள்ளி மாணவர்களுடன் உரையாற்ற ஏற்பாடு!


ஆசிரியர் தினத்தின் பெயரை இனிமேல் சமஸ்கிருத மொழியில் குருஉத்சவ்-2014 என்று அழைக்கப்பட வேண்டுமென மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த நாளில் சி.பி.எஸ்.சி பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பிரதமர் நரேந்திர மோடியின் உரையை கேட்க வேண்டுமென நாடு முழுவதும் உள்ள சி.பி.எஸ்.சி பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

மேலும் தில்லியில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக பிரதமார் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாட மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. அந்த உரையாடலை அனைத்து சி.பி.எஸ்.சி பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் கட்டாயம் கேட்க வேண்டும். அந்த நாளில் எதற்காகவும் விடுப்பு எடுக்கக்கூடாது. எனவும் அனைத்து சி.பி.எஸ்.சி பள்ளிகளிலும் ஒளிப்பரப்பு சாதனங்கள், டி.டி.எச் சாட்டிலைட், மின்சாரம், மின்வெட்டு ஏற்பட்டால் அதை தவிர்க்க ஜெனரேட்டர் என அனைத்தும் தயார் நிலையில் இருக்க ஏற்பாடு செய்யவேண்டும். திரையிடுவதற்கான சாதனங்கள் இல்லாத கிராமப்புற பகுதிகளில் கட்டாயம் ரேடியோ மூலம் உரையை கேட்க, பள்ளி நிர்வாகங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் பள்ளியின் இணையதளத்தில் இந்த நிகழ்ச்சி குறித்த தகவலை, தொடர்ந்து வெளியிட வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்த நிகழ்ச்சிக்கு என்னென்ன வகையிலான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எத்தனை மாணவர்கள், ஆசிரியர்கள் பங்ககேற்க உள்ளனர். என்ற முழு விவரங்களையும், சி.பி.எஸ்.சி இயக்குனரகத்திற்கு செம்டம்பர் 1-ம் தேதி மாலை 5 மணிக்குள் ஒவ்வொரு பள்ளி நிர்வாகமும் தெரிவிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement